3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தம்பிராஜா திருநாவுக்கரசு
முன்னாள் உரிமையாளர்- People Traders & Suppliers, Gowry Trading Centre Colombo, Vavuniya
வயது 76
Tribute
58
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வேலணை வடக்கு இலந்தை வனதைப் பிறப்பிடமாகவும், சரவணையை வதிவிடமாகவும், கொழும்பு, வவுனியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிராஜா திருநாவுக்கரசு அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் ஒளி விளக்கே!
அன்பின் பிறப்பிடமே
ஆண்டு மூன்று ஆன போதும்
ஆறவில்லை நம் துயரம்!
காலம் கொண்டு சென்றதோ - உம்மை
தவிக்கும் உம் உறவுகளையும் தாண்டி...
சோக நெருப்பில் எமைதள்ளி
நீர் சென்ற இடம் தான் எதுவோ...?
ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூடசில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?
காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்