
யாழ். வேலணை வடக்கு இலந்தை வனதைப் பிறப்பிடமாகவும், சரவணையை வதிவிடமாகவும், கொழும்பு, வவுனியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா திருநாவுக்கரசு அவர்கள் 23-12-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா சின்னத்தங்கம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளிநாயகி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
உமாகௌரி(கனடா), மாதுமை(பிரான்ஸ்), கஸ்தூரி(கனடா) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
அருநீதன், குணசீலன், சுபாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான S.T பழனியப்பா, விசாலாட்சி, கணேஸ் மற்றும் மகாலட்சுமி, S.T மகாலிங்கம்(PM) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், விஸ்வலிங்கம், ரத்தினாம்பிகை, இராமசாமி மற்றும் பொன்மயிலாம்பிகை, கணேசலிங்கம்(இளைப்பாறிய அதிபர்), குறிஞ்சிவேந்தன், மகாதேவன், பகீரதி, சுந்தரமூர்த்தி, புஸ்பராணி, செவ்வேள் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வர்சன், திவ்யன், அக்ஷயன், தணிகன் ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.