யாழ். வேலணை வடக்கு இலந்தை வனதைப் பிறப்பிடமாகவும், சரவணையை வதிவிடமாகவும், கொழும்பு, வவுனியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிராஜா திருநாவுக்கரசு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
உதிக்கின்ற சூரியன் அந்தியில் துயில்வது
இயற்கையின் நியதி அவ்வாறே
படைத்தவன் விடுவதில்லை இறுதிவரை நிலைக்க
காலத்தில் கணக்கோ மூச்சுக்காற்றின் கணக்கோ
அப்பா, நீங்கள் என்ன விதிவிலக்கா?
இழந்து தவிப்பது நாமல்லவா.
எமைத் தவிக்க விட்டு எங்கு சென்றீர்கள்!
சிவனும் பார்வதியும் இணைபிரியா உறவுபோல
அம்மாவையும் துணைக்கு அழைத்தீர்களா?
பெற்றோரை இழந்து ஏங்கி நிற்பது நாமல்லவா
எமது வாழ்வு சிறக்கவென இறுதி மூச்சு வரை
எமக்காக வாழ்ந்தீர்கள்
நீராட்டிச் சீராட்டி, கல்விபுகட்டி அன்புகாட்டி
பண்பு புகட்டி எமை வாழ வைத்த எம்
அன்புத் தெய்வமே உமை எங்கு காண்போம்
கண்ணை இமை காப்பது போல் எமைக் காத்து
எம் இன்பத்தில் திளைத்தும் துன்பத்தில் துவண்டபோது
தூணாக நின்றும் எமக்காக வாழ்ந்த எம் அப்பாவே
உமை இழந்து ஆண்டுகள் இரண்டு ஆனதுவோ!!
ஏங்கித் தவிக்கின்றோம் உங்கள் நினைவாலே
மருமக்கள், பேரர்கள் உங்கள் குரல் கேளாது
தவிக்கின்றனர் காலங்கள் பல கடந்தாலும்
நீங்காது உங்கள் நினைவலைகள்
நாயகனும் நாயகியும் இணைபிரியா உறவென்று
இறைவன் திருவடியில் நிம்மதியாய் உறங்குங்கள்
உங்கள் ஆத்மா சாந்திக்காய் சித்தி விநாயகரையும்
கதிர் வேலவனையும் வேண்டித் தொழுகின்றோம்.