
யாழ். வேலணை வடக்கு இலந்தை வனதைப் பிறப்பிடமாகவும், சரவணையை வதிவிடமாகவும், கொழும்பு, வவுனியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிராஜா திருநாவுக்கரசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று கடந்ததப்பா உங்களை நாம் இழந்து
ஏற்க மறுக்கிறது எம்மனம் உங்களின் மறைவை
தந்தையே உம் அன்பான பேச்சும் கனிவான
பார்வையும் நிறைந்த உங்கள் இன்முகமும்
இனி எங்கே நாங்கள் காண்போம்!
வாழ்க்கையில் பல மேடு பள்ளங்கள் பார்த்தபோதும்
கடைசிவரை மன உறுதியுடன் உழைத்து
எமக்கு நல்வழி காட்டிய எம் அப்பாவே
நீங்கள் விட்டுச்சென்ற உங்கள் நற்பண்புகளை
நாம் தொடர கலங்கரை விளக்காக என்றும்
எமக்கு ஒளிர்வாய் அப்பா!
மாண்டவர் மீண்டும் வரார் என்பது
மானிடத்தின் நியதி ஆனாலும்
உம் செழித்த முகம் காணத் துடிக்கிறோம்
உம் பேரர்கள் எந்நாளும் தேடித்தவிக்கின்றனர்
அவர்களுக்கு காவலாக என்றும் இருந்து வழிகட்டுவீர்!!