5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பிப்பிள்ளை பொன்னையா
முன்னாள் பிள்ளையார் ஸ்டோர்ஸ், மூலைக்கடை- மட்டுவில்
வயது 90
Tribute
10
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், சரசாலை 5ம் சந்தி கனகம் புளியடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை பொன்னையா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு 5 மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமய்யா?
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
என்றும் உயிர் வாழும் எங்கள்
இதயமதில் இறுதி வரை நிலைத்து நிற்கும்
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!
உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்..!
தகவல்:
உங்கள் பிரிவால் வாடும் மனைவி,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,