யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும், யாழ். கல்வியங்காட்டினை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை கைலாசநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01-10-2026
எனக்குக் கண்ணாய் நீ இருந்தாய்; உனக்குக் கண்ணாய் நான் இருந்தேன். எங்கள் பிள்ளைச் செல்வங்களை கண்ணை இமை காப்பது போல் காத்து வாழவைத்த தெய்வமே! கண்ணிமைக்கும் நேரத்தில் காலன் உன்னைப் பறித்துவிட்டானே...
இன்று தனிமையில் தவிக்கின்றோம். நான் மட்டுமல்ல, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் உன்னை இழந்து தவிக்கின்றனர். ஒரு கணம் நீ இல்லை என்று நினைக்கும் போது, என் இதயத்தை யாரோ கத்தியால் குத்திக் கிழிப்பது போல் இருக்கிறது; அந்த வலியை என்னால் தாங்க முடியவில்லை, கதறி அழ வேண்டும் போல் இருக்கிறது. என்ன செய்வேன் இறைவா!
இன்று நீ எங்களை விட்டு மறைந்து ஒரு வருடம் ஆகியும், நீ இல்லை என்று நான் எண்ணவில்லை. எனக்குள்ளேயே நீ இருக்கிறாய் என்றுதான் உணர்கிறேன். எனக்குள் இருக்கும் உன்னுடன் அடிக்கடி பேசுகிறேன், சண்டை போடுகிறேன், என் கவலைகளைக் கூறுகிறேன். அடிக்கடி கனவில் என்னுடன் அன்பாகவும் பாசமாகவும் பேசுகிறாய்; அதில் நான் ஆறுதலும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
நீ என்றும் என்னோடுதான் இருக்கிறாய் என்று நம்புகிறேன்.
ஒரு வருடம் என்ன, என் உயிர் உள்ளவரை எனக்குள் இருக்கும் உன்னை நான் மறக்க மாட்டேன். எனக்குள் நீ இருந்து என்னை எப்போதும் பாதுகாப்பாய் என்று நம்புகிறேன்.
என்றாலும், உனக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை இனி என்னால் செய்ய முடியவில்லையே என்று ஒரு கணம் உடைந்து போகிறேன். உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கிறோம்.
என்றும் உனக்குள் இருக்கும் உன்னுயிர் மனைவி: ரமணி, மற்றும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.