யாழ். வேலணை கிழக்கு 2ஆம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும், யாழ். கல்வியங்காட்டினை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை கைலாசநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பிற்க்கும் பாசத்திற்க்கும் மேலானவரே,
ஆதரவு வார்த்தை பேசுவதில் கடவுளாய்
இன்முகம் காட்டுவதில் நல்லவராய்
ஈரமான மனசுக்காரனுமாய்
உத்தமனாய் உள்ளத்தாள் உயர்ந்தவராய்
ஊராருக்கும் பிடித்தமானவராய்
எண்ணமதில் நல்லதே எண்ணியவருமாய்
ஏற்றி விடுவதில் ஏணியுமாய் ஆனவரே
ஐயமது சற்றும் மனதில் இல்லாதவரே
ஒன்று பட்டு ஒற்றுமையாய் வாழ்ந்தவரே
ஓடி ஓடி உழைத்த உழைப்பாளருமானவரே
நெஞ்சமதில் நிறைந்துவிட்ட அன்பு
தெய்வமே உங்கள் ஆத்ம சாந்தி அடைய
இறைவனை பிரார்த்தித்து
உங்கள் பாத கமலத்தில் கண்ணீரை
காணிக்கையாய் சமர்பிக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஒம் சாந்தி!!!
அன்னாரின் 31ம் நாள் நினைவு அஞ்சலி 10-11-2025 திங்கட்க்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் அவரது இல்லதில் நடைபெற உள்ளது அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பம் சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.