அன்று தொட்டு இன்று வரை அன்பு மொழி பேசி அளவிலா அன்பு கொண்டு அழவழாவும் அருமை நிறை அண்ணாவே! தம்பி எனத் தெரிந்தும் அண்ணன் எனக் கூறி நீ கதைத்த அத்தனையும் கனவாகிப் போனதுவோ! சந்திக்கும் போதெல்லாம் சந்தோசம் தனைக் காட்டி கட்டி அணைத்து எம்மை கனிவு மொழி பேசும் அன்பு மிக கொண்ட உன் போல் அவனியிலே யார் உளரோ! உன் ஊரில் நீயும் உளமாரப் பற்றுக் கொண்டவனே! நிலத்தில் உன் குலதெய்வம் அம்மனிலும், புலத்தில் பிள்ளையாரிலும் பற்றுக் கொண்டதனால் பல பணிகள் செய்தவனே! ஊரிலே சென்று வாழ்வது எத்தனை மாந்தர்களின் இறுதி ஆசை என்றாலும் ஊரிலே உயிர் நீக்கும் உந்தன் ஆசை நிறைவேறி விட்டதுவே! பிறந்தநாள் அன்றும் நாம் பேசிச் சிரித்தோமே! இன்று நாம் என்றென்றும் பேச முடியாமல் உன் இறுதி மூச்சு நின்று போனதேனோ! உன் ஆயுள் தான் முடிந்தாலும் எம் அன்பு நினைவுகளோ என்றுமே மாறாது! கைலாசநாதனே உன் காலடியில் உன் மைந்தன் உறங்கிடவே உன் கழல் இறைஞ்சுகின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! தில்லையம்பலம் குடும்பத்தினர் சுவிற்சர்லான்ட