யாழ். கொக்குவில் மேற்கு ஆடியபாதம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நடத்துவதற்கு ஓத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன், குறிப்பாக பெருங்குளிரையும் பொருட்படுத்தாது பூதவுடலை சுமந்து வந்து எமது கையில் தகனக்கிரியைகளுக்காக ஒப்படைத்த அன்னாரின் நண்பர் குழாமிற்கு தனித்து நன்றி சொல்ல வேண்டியதும் எமது கடமையாகின்றது.
அன்னாரின் அந்தியேட்டி கிரியை 21-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும். ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்வும் பின்னர் அறியதரப்படும்.
நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனை அரசு விதிமுறைகளுக்கு அமைய நடைபெறும்.
தென்னாடுடைய சிவனே போற்றி! என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
RIP