யாழ். கொக்குவில் மேற்கு ஆடியபாதம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில் சென்றதேனோ
என்னை தவிக்க விட்டு?
வரமென என் வாழ்வில் வந்த தவமே
காலன் உன்னைக் காவுகொண்டு ஆண்டு
ஒன்று ஆனதுவோ நம்ப முடியவில்லை
உங்கள் நினைவால் நாம்
நாளும் தவிக்கின்றோம் - உயிரே!
எமக்கு உயிர் தந்த அப்பாவே
அன்பினில் எம்மை சீராட்டி
பண்பினில் நாம் சிறக்க
நாளும் வழிகாட்டிய எம் தந்தையே!
பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்
உறுதியின் உறைவிடமாய் - எங்கள்
உள்ளத்தில் வீற்றிருக்கும்
எந்தையே, அன்புத் தந்தையே!
உங்கள் வார்த்தைகள் எம்மை வாழவைக்கும்
உங்கள் நினைவுகள் எம்மை வாழ்த்திடும்...
அம்மாவின் நினைவு
பத்து திங்கள் தவமிருந்து
பாசமாய் பெற்றெடுத்த
முத்துனா மகனே.... குட்டி
காலனவன் தன் கணக்கை
சாலவே செய்திடவே
மண்விட்டு நீ மறைந்து
விண் நோக்கிச் சென்றாலும்
கண் முன்னே நீ வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
என் முன்னே உன் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அன்பு மகனே.....
சகோதரர்கள் நினைவு
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் அன்புச் சகோதரா
நீ இறையடி எய்தி ஓராண்டு ஆனாதுவோ
நம்ப மனம் மறுக்கிறது
இதயம் எல்லாம் வலிக்கிறது
குட்டி... மறைந்திட்டாயோ என்று நினைத்திட
விழிகள் கண்ணீரால் நனைகிறது
மீளவும் பெற முடியுமா
நீ எம்மோடு
கூடிக்குலாவிய நாட்களை
ஒன்றென்ன ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
எம் நெஞ்சை விட்டகலாது உன் நினைவுகள்
எம்மை விட்டு பிரியாது உனதன்பும் பாசத்தொடரும்
எத்தனை கனவுகள் கண்டிருப்போம்
அத்தனையும் புதைந்து போனதய்யா
உன் அழகான புன்னகை முகத்தை
தொலைத்துவிட்டு
வற்றாத உன் நினைவுகளுடன்
மனம் கலங்கி நிற்கும் உன் சகோதரர்கள்...
உன் பாதங்களில் எங்கள் கண்ணீர் பூக்களை
காணிக்கையாக்கி உன் ஆத்மா சாந்தியடைய
கொக்குவிற் பதியுறை மஞ்சவனப் பதியானை வணங்கி நிற்கின்றோம்.
உன் பிரிவால் துயருறும் அம்மா, மனைவி, பிள்ளைகள்,
சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
Appa, in loving memory of you
You were the kindest and most loving
father
You may not be with us anymore
But our love for you will never die
We're so thankful for all the
memories we made
And all the lessons you taught us
Not a day goes by that we don't think
of you
We wish we still had your wisdom to
guide us
We're trying to become someone
you'd be proud of
We miss your smile and sense of
humour everyday
Nothing can fill the space you left in
our hearts a year ago
Appa, wherever you are, you are gone
but never forgotten
We miss you everyday- may your soul
forever be in peace.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Thayani Thillainathan family from Norway.
RIP