5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தம்பையா தியாகராஜா
வவுனியா பிரபல வர்த்தகர், கஜன் சென்டர் உரிமையாளர்
வயது 77
Tribute
43
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா தியாகராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையாத் தீயில்
அலையான சுவாலையாய்
அனல் கக்கி எரியுதய்யா
அப்பா உங்கள் நினைவுகள்!
அன்பின் அடையாளமே அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே நிறைந்திட்ட குலவிளக்கே
பாசமாய் தேடுகிறோம் தூரமாய் போனதென்ன!
நீங்கள் மறைந்த நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்
உருக்குலைந்து மாய்கின்றோம்!
உங்கள் முகம் மறைந்ததென்று
நம்ப மறுக்கின்றது எங்கள் மனங்கள்
வருடங்கள் ஐந்து கடந்திட்ட போதிலும்
சொல்ல முடியவில்லை எம் சோகத்தை.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கிறோம்!
தகவல்:
குடும்பத்தினர்