3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தம்பையா தியாகராஜா
வவுனியா பிரபல வர்த்தகர், கஜன் சென்டர் உரிமையாளர்
வயது 77
Tribute
43
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 09-12-2023
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா தியாகராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமக்கெல்லாம் நல்வழி காட்டிய தீபமே!
எம் குடும்ப விளக்கே!
நீங்கள் எம்மை விட்டுச் சென்று
மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டதே
நம்ப முடியவில்லை நாளும் தெரியவில்லை
உங்கள் இனிய அன்பான கதைகள்
எம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன
உங்கள் சிரித்த முகம்
அன்பான பார்வை கொண்ட தோற்றம்
எம் கண்களில் தெரிகின்றதே
எங்களிடமிருந்து உங்கள் உயிரைப் பறித்த
விதியை என்னென்று சொல்வது அப்பா
உங்களை நினைக்காத நாளுமில்லை
கண்ணீர் விட்டு அழாத நேரமுமில்லை அப்பா
நீங்கள் எம்முடன் கூடவே இருக்கின்றீர்கள் அப்பா
நீங்கள் மறையவில்லை என்றென்றும்
எங்களுடன் வாழ்கின்றீர்கள் அப்பா.
தகவல்:
குடும்பத்தினர்