5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுவீக்ஷா சதீஷன்
2013 -
2020
Hayes, United Kingdom
United Kingdom
Tribute
144
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
லண்டன் Hayes ஐப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுவீக்ஷா சதீஷன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புச் செல்வமே சுவீக்ஷா...
எங்களோடு நீண்ட நெடுநாட்கள்
வாழ்வாய் என்றும்
எங்களுக்கு
ஆறுதலாய் இருப்பாய் என்றிருந்தோம்!
அத்தனையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய் செல்லமே!
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
நான் பார்க்கும் திசையெல்லாம்
உன் உருவே தெரிகிறது செல்லமே!!
நிஜத்திலே வந்துவிட்டால்
நிம்மதியாய்
நாம் இருப்போம்
வாராது சென்றதனால்
தீராது சோகமம்மா!!!
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கிறது உன் வரவை எதிர்பார்த்து..!
ஈரவிழிகளுடன் ...
அப்பா, அம்மா, சகோதரி மற்றும் உறவினர்கள்
தகவல்:
குடும்பத்தினர்