4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுவீக்ஷா சதீஷன்
2013 -
2020
Hayes, United Kingdom
United Kingdom
Tribute
140
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
லண்டன் Hayes ஐப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுவீக்ஷா சதீஷன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
வலிநிறைந்த நாள்
ஆண்டுகள் நான்கு கடந்தபின்பும்
உன் விம்பம் எங்களின் விழியை
விட்டு அகலவில்லை தங்கமே சுவீக்ஷா..!
உன் வாசனை எங்களின்
சுவாசத்தில் இருந்து நீங்கவில்லை
உன் இனிமையான குரல்
எங்களின் செவியில் இன்னும் ஒலிக்கிறது..!
உன்னைப் பாசத்துடன் தழுவ
இன்னும் மனம் துடிக்கிறது.
என்று உன்னை இனி காண்போம்
என்று மனம் ஏங்குகிறது செல்லமே சுவீக்ஷா..!
உன் அன்பான பார்வையும்,
அழகான புன்சிரிப்பும்,
பணிவான செயலும், நீ
போனபின்பும் எங்களைக்
கட்டிப் போட்டுள்ளது.
உன் பிரிவை இன்னும் மனம்
ஏற்றுக் கொள்ளவில்லை, நம்ப மறுக்கிறது.
எங்கள் உள்ளக் குமுறல்கள்
இதயத்தை வதைக்கிறது.
எங்களுடனே திரும்ப வந்து விடு செல்ல மகளே சுவீக்ஷா..
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்