யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதி, கொழும்பு, பிரான்ஸ் Bobigny ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா விவேகானந்தன் அவர்களின் நன்றி நவிலல்.
ஆறுதல் அடைவோம் ஐயா ! அன்பின் ஊற்றே அறிவுக் கொழுந்தே !
ஆறுதல் கூறி நின்ற குலக்கொழுந்தே ! கோமளமே !
அற்றைத் திங்கள் ஆனந்தத்தில் பூத்திருந்தோம்
இற்றை திங்களோ உன் உடலை நாம் - சுட்டுவிட்டோம் !
எண்ணில் அடங்கா செயல்தீரன் எம் அப்பா
எதனை நாம் தொட்டுச் செல்வோம் !
எதனை நாம் விட்டு செல்வோம்!
அன்னத்தை தட்டில் ஏந்தி அம்புலியை காட்டி நின்றாய் !
வண்ணப்பட்டாடை வாங்கி வடிவழகு - பார்ப்பாய் அப்பா !
இன்னார்க்கு இதுவென்று எடுத்து வைப்பாயப்பா !
கொஞ்சு மொழி பேசி நின்று குறும்புத்தனம் செய்வாய் நீ ..!
ஒரு மருத்துவர் போல நின்று மருத்துவமும் செய்திடுவாய்
கால் தேயக் காட்டை களனியும் ஆக்கிடுவாய்
உன்னை நினைக்கையிலே உதிரம் கொட்டுதையா !
கண் மூடி திறக்கு முன் காற்றாய் பறந்தாயே !
காக்கும் கடவுள் ஐயா நீ
நாம் உன்னை காலமெல்லாம் நம்பி வாழ்ந்தோம்..
இன்னும் பத்து வருடங்கள் பாரினிலே இருப்பாய்
என்று பகல் கனவு கண்டோம் அப்பா ..
அதிரடியாய் நீ சென்றதனால்
அடி வயிறு கலங்குதய்யா !
வாழ்ந்தது போதும் என்று வாய்ப்பாட்டாய் சொல்லி சொல்லி ,
வானுலகம் சென்று வரலாறு படைத்தாயோ !
பாசம் என்ற உறவு எங்களைப் பைத்தியம் ஆக்குது அப்பா!
மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மனிதன் மீது
மண்ணுக்கு ஆசை!
எம் கண் கண்ட தெய்வமே, அப்பா, தாத்தா, மாமா என்றும் நாம் உன்னை மறவோம்.
பிரிவால் வாடும் மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.