1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 02 JUL 1940
மறைவு 24 APR 2021
அமரர் சுப்பையா விவேகானந்தன் 1940 - 2021 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதி, கொழும்பு, பிரான்ஸ் Bobigny ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா விவேகானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

இன்று நீங்கள் இல்லாமல்
தனியாய் தவிக்கின்றோம் நாம் வாழும்
காலம் வரை உங்கள் நினைவுகளும்
 எங்கள் உள்ளத்தில் வற்றாத
ஊற்றாகப் பொங்கிப் பெருகும்.

எத்தனை உறவுகள் இருந்தாலும்
தோள்சாய அப்பா இல்லையே! என
கதறியழும் பிஞ்சுகளை அரவணைக்காது
அநாதரவாய் தவிக்க விட்டுவழி தெரியாத்
 தூரம் விரைந்தோடி சென்றதேனோ!

எங்களை தவிக்க விட்டு நீர்
 தூரமாய் சென்றதென்ன?
எங்கள் முகம் காண வருவாயா ஓர் கணமே?
 உங்கள் நினைவுகள் அழியவில்லை
 எங்கள் கண்ணீரும்
நிற்கவில்லை அப்பா... அப்பா...
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவால் வாழ்ந்திடுவோம் |
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திகின்றோம்.

உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்....

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 25 Apr, 2021
நன்றி நவிலல் Sun, 23 May, 2021