யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுமதி இராஜகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?
காயங்கள் ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் களைந்துபோகும்
ஆனால் என்றுமே மாறாமல் இருப்பது
உன் பாசம் மட்டுமே
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.