2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுமதி இராஜகரன்
முன்னாள் ஆசிரியை- வட இந்து மகளிர் கல்லூரி
வயது 53
Tribute
30
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுமதி இராஜகரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-11-2021
அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆனதா.?
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே…
துன்பம் ஏதும் இல்லாமல் கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உங்கள் மலர்ந்த முகத்துடன் எங்களை உங்கள்
கண் இமைக்குள் வைத்து நாம் வாழ
வழி அமைத்துக் கொடுத்தீர்கள் அம்மா!
அன்பைச் சுமந்து அறிவைச் சுமந்து
நல்ல பண்பைச் சுமந்து
ஈடில்லாப் பாசம் சுமந்து
நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே நிர்மூலமானதென்ன?
என்றும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
கணவர், பிள்ளைகள்