யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் சுமதி இராஜகரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 01:12:2022
கரம்பிடித்தவனோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?
ஆண்டுகள் மூன்று கடந்ததுவே
உங்கள் பளிங்கு முகம் பார்க்காமல்
உங்கள் பாசக் குரல் கேட்காமல்
உங்கள் நினைவோடு நாம் வாழ்ந்து
மூன்று ஆண்டுகள் ஆனதே அம்மா!
எத்தனை காலம் போனாலும்
எம் ஜீவன் உள்ள மட்டும்
உங்கள்
நினைவு மாறாது
உங்கள்
உறவுகள் மறக்காது
கருப்பைக்குள்ளிருந்து
நாம் காலுதைத்த போது...
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக
விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா…
நீங்கள் இல்லாமல் அரண்மனையாய்
இருந்தாலும்
அநாதையாய்
தவிக்கின்றோம்…
ஆயிரம்
கடவுளின் வரமிருந்தாலும்
தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!