யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுமதி இராஜகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பம் என்னும் கோயிலிலே
மனை சிறக்க வாழ்ந்த - எம்
அன்னையே ஓராண்டு காலம்
உருண்டோடிப் போனாலும் உங்கள்
அழியாத நினைவுகள் நீங்காது எம் தாயே
நினைவுகள் நித்தம் வந்து நிம்மதியை தொலைக்கின்றது
வருமா மீண்டும் வசந்தம் என்ற தொடரான கேள்வியோடு
தொடர்கின்றது எம் கண்ணீர் பயணம்
உயரங்கள் நாம் காண எம் வாழ்க்கைப் பயணத்தில்
துணையாய் நீ நின்றாய் பணம் தேடி
அலையும் பாசமில்லா உலகினில்- உன்
போல் பாசத்தை மிஞ்சிட யார் உள்ளனர் இப் பூமிதனில்
ஏக்கம் மட்டும் மிஞ்ச நீர்த்துளிகள் நிறைகின்றன
காலங்கள் கரைந்தாலும் ஆயிரம் உறவுகள் எம் அருகில்
இருந்தாலும் எம் கண்களில் ஒளிரும் உன் அன்பின் வெளிச்சம்
உன் பிரிவால் தவிக்கும் அம்மா, மாமி, கணவன், சகோதரர்கள்,
பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்