
முல்லைத்தீவு விசுவமடுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சொரூபன் சுருதியன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் உயிருக்குள் உருவான சுருதிக்குட்டியே!
உன் அன்பான முகமும்
வசீகரிக்கும் உன் உருவமும்
என்றும் என் கண்ணுக்குள்ளே
உன் துடிப்பான பேச்சும்
துள்ளளான நடையும்
மறக்க முடியுமாடா செல்லமே!
என் வாழ்வின் வசந்தமாய் வந்தவனே
ஏன் எம்மை தவிக்கவிட்டு சென்றாய்!
உன் துணையுடன் காலங்கள் கடக்கலாம்
என்றிருந்த போது நீயும் உன் அப்பாவுக்கு
துணையென சென்றுவிட்டாய்!
உன் அருகாமை தேடி உருகும்
உனது அன்பு தங்கைக்கு
என்ன ஆறுதல் சொல்வேன்
இன்று நீ இருந்தால் எப்படி
வளர்ந்திருப்பாய் என் உயிரே!
எம் இருவருக்கும் பெரிய பலமாயும்
துணையாயும் இருந்திருப்பாய்!
நாம் கொடுத்து வைக்கவில்லை பாவிகள் நாங்கள்.
இதே நாளில் எம் செல்வத்தோடு விவேகன் குட்டி, நளாயினி,
தமிழவள், சிவசோதியக்கா ஆகியோரையும் நினைவுகூறுகின்றோம்.
சுருதிக்குட்டியின் அணைப்புக்காக ஏங்கும் உனதன்பு உறவுகள்.