Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 DEC 1950
இறப்பு 02 AUG 2022
மருத்துவர் சொக்கலிங்கம் செந்தில்குமார்
தமிழ்த்தேசியப் பற்றாளர், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி - பழைய மாணவர் & கொழும்பு மருத்துவக் கல்லூரி- பழைய மாணவர்
வயது 71
மருத்துவர் சொக்கலிங்கம் செந்தில்குமார் 1950 - 2022 Tellippalai, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பன்னாலை தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சொக்கலிங்கம் செந்தில்குமார் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் நான்கு 
உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்பு
முகம் எம் நெஞ்சை விட்டு
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்தஎங்கள் அன்புச் சகோதரனே!

எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!

அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம்!

நான்காண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம் கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை!

உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.  

தகவல்: செந்தில்குமாரி & செந்தில்மோகன்

Summary

Photos