யாழ். பன்னாலை தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சொக்கலிங்கம் செந்தில்குமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு பேராண்டாய் ஓடியும்
ஓடாத துயரோடு ஒடுங்கிக் கிடக்கின்றோம்
வேராக இருந்த நினைவில்
வேறாக போய்விட்ட நினைவில்
நீங்கள் இல்லாத உலகம் என்றும் இருள் மயமானது,
எங்கே காண்போம் உங்கள் மலர்ந்த முகத்தை?
உங்கள் பிரிவைத் தாங்குமா எங்கள் இதயம்?
இடியாய் விழுந்த இழப்பின்
வலியினைத் தாங்க முடியாது
நாங்கள் துடிக்கின்றோம்
புழுவாய்த் துடிக்கும் எங்கள் மனதினை
தேற்றத் தெரியாது நாங்கள் தவிக்கின்றோம்
தனியாய்ப் புலம்புகின்றோம்!!!
காலம் இழப்பின் காயங்களை மாற்றும் என்ற
நம்பிக்கையுடன் ஈராண்டு கடந்தாலும்
நீங்காத நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தியடைய நாளும்
இறைவனை வணங்குகிறோம் அப்பா..!