யாழ். பன்னாலை தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சொக்கலிங்கம் செந்தில்குமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உடன்பிறப்பே உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே
அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே நிறைந்திட்ட குல விளக்கே
தோற்றமும், மறைவும்
இயற்கை வகுத்த
நியதி யென்றாலும்
இன்பமும், துன்பமும்
வாழ்வின் மேடையில்
அரங்கேறும் நாடகமானாலும்
பார்த்து பழகிய கண்களும்
பேசிப் பழகிய வாயும்
கேட்டு மகிழ்ந்த காதுகளும்
நினைவுகள் பதித்த நெஞ்சும்
உமது பிரிவுத் துயரால் தவிக்கிறதே குடும்பம்!
நெஞ்சமதில் நிலைத்து நின்று
எண்ணமதில் என்றும் நிலைத்து
வண்ணமலர் வாசமென
மனங்களிலே வீசி நின்றீரே!
காலனுமைக் கவர்ந்து சென்ற
கொடுமையை எண்ணி
மனம் வெதும்பியே வாடுகின்றோம்...
உங்களது பிரிவால வாடும் குடும்பத்தினர்!!!!