யாழ். பன்னாலை தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சொக்கலிங்கம் செந்தில்குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
"ஆண்டொன்று ஆனதுவோ ஆறிடுமா
எம் துயரம் ஆல மரம் தான் வளர்ந்து
அழகு நிழல் பரப்பி அன்பு
வழி வாழ்ந்த எங்கள் அண்ணா!
உற்ற உடன் பிறப்பே அடிமேல்
அடியெனவே
மடியில் இடி
வீழ்ந்தது போல் பெற்ற தாய்
வயிறும் பற்றி எரிந்திடவே
பாதி வழி
தான் நின்று தொப்புள்
கொடி உறவே!
அன்புத் தந்தையுடன் அரன்
பதம் தானடைந்தீர்கள்
பேரோடு
புகழ் சேர நேரான பாதையிலே
சீராக வாழ்ந்த எங்கள் ஆணிவேரான
விருட்சங்களே!
விண்ணிலே வீற்றிருந்து
விடி வெள்ளியாய் ஒளி
வீசி
வழி காட்டிடவே வேண்டுகிறோம்.
உங்கள் பிரிவால் துயருறும் சகோதர சகோதரிகள்"
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்