Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 27 JUN 1930
இறப்பு 12 NOV 2011
அமரர் சிதம்பரநாதர் இரத்தினசபாபதி சிவயோகலக்சுமி இரத்தினசபாபதி
வயது 81
அமரர் சிதம்பரநாதர் இரத்தினசபாபதி சிவயோகலக்சுமி இரத்தினசபாபதி 1930 - 2011 அல்லைப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரநாதர் இரத்தினசபாபதி (தபால் அதிபர், அல்லைப்பிட்டி) அவர்களின் 32ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் பல சென்றதையா
ஆறவில்லை எம் துயரம்
ஆறுதல் எமக்கு சொல்வதற்கு
ஐயா நீங்கள் இல்லையே !

ஒளி தரும் சூரியனாக
இருள் அகற்றும் நிலவாக
ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே

உங்கள் ஒழுக்கம் நற்பண்பு மதிப்புகள்
யாவும் எங்கள் வாழ்வில் என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும்!

 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவயோகலக்சுமி இரத்தினசபாபதி அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.


பதினைந்து ஆண்டுகள் மறைந்தது அம்மா
உன் அன்பு முகம் எம் இதயங்களை விட்டு
இன்னும்  நீங்கவில்லையம்மா!

நீங்கள் எங்களை விட்டு அகலவில்லையம்மா!
எங்களோடுதான் வாழ்கிறீர்கள் அம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு என்றும்
பிரியாத தாய் நீயம்மா!

அன்று எங்கள் அழுகையின் அர்த்தம்
புரிந்த அகராதி புத்தகம் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மா!

ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
உன்னை போன்று அன்பு செய்ய யாரும்
இல்லையம்மா இவ் உலகில்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

நினைவஞ்சலி Thu, 17 Oct, 2024
நினைவஞ்சலி Thu, 06 Nov, 2025