யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரநாதர் இரத்தினசபாபதி (தபால் அதிபர், அல்லைப்பிட்டி) அவர்களின் 29ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03 -11 -2023
பாசத்தின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
எங்கள் உயிர் மூச்சாய் எம்மோடு
வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு இறைவன்
பாதம் சென்றீர்களோ
வரமா எமக்கு கிடைத்த ஐயாவே
வழமாக எமைக்காத்த தெய்வமே
உங்களை வருந்தி எங்களைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களீத்தீர்
உங்கள் நினைவுகள் எப்போதும்
அன்பால் என்றும் எத்தனை ஆண்டுகள்
சென்றாலும் நீங்காது உங்கள் நினைவுகள்
எம் நெஞ்சைவிட்டு அகாலது
எங்கள் உள்ளங்களில் அணியா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிவிட்டு தளிர்களார்
எம் இதயங்களில் கனத்துக் கொண்டே இருக்கும் ஐயா.
உங்களின் ஆத்மா சாந்திபெற
திருவெண்காட்டானை வேண்டி நிற்கின்றோம்...
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவயோகலக்சுமி இரத்தினசபாபதி அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30-10-2023
பாசமுள்ள எங்கள் அம்மாவே
அன்பால் எங்களை அரவணைத்தீர்களே.
எங்கள் அன்பான பொக்கிஷமே
நீங்கள் மண்ணில் மலர்ந்த
மலரம்மாஎண்ணத்தில் இனிமை கொண்ட
எங்கள் வாழ்வியலின் தத்துவமே
வசந்தகால ஒளிவிளக்கே.
மறுபடியும் வரவேண்டும்
உங்கள் மடியில் தலைசாய்த்து உறங்கவேண்டும்
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழவைத்து
உறுதியுடன் எமைகாத்த உத்தமியே
எங்கள் அன்புத் தெய்வமே
அம்மா என்று குரல் எழுப்புகிறோம் ஆனால்
பதில் இல்லையே
நீங்கள் எங்களை பிரிந்து
பன்னிரெண்டு ஆண்டுகள் சென்றாலும்
எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்
அம்மா உங்களின் ஆன்மா சாந்திபெற
திருவெண்காட்டானை வேண்டி நிற்கின்றோம்..
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.