Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 27 JUN 1930
இறப்பு 12 NOV 2011
அமரர் சிதம்பரநாதர் இரத்தினசபாபதி சிவயோகலக்சுமி இரத்தினசபாபதி
வயது 81
அமரர் சிதம்பரநாதர் இரத்தினசபாபதி சிவயோகலக்சுமி இரத்தினசபாபதி 1930 - 2011 அல்லைப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரநாதர் இரத்தினசபாபதி (தபால் அதிபர், அல்லைப்பிட்டி) அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 22-10-2024

பாசமிகு தந்தையே!
பார்புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
உயிர் வாழும் ஐயா!

எங்கள் இதயத்தில் இறுதிவரை
நிலைத்து நிற்கும் ஐயா
நீங்கள் இறையடி சேர்ந்து 30 ஆண்டுகள் ஆகியும்
நம்ப மனம் மறுக்கிறது!
இதயமெல்லாம் வலிக்கிறது!
வேரற்ற மரமாய் வேதனயில் துடிக்கிறோம்
எங்களை விட்டு ஏன் மறைந்தீர்கள்.
மீளவும் பெறமுடியுமா எம்மோடு
 கூடிக் குலாவிய நாட்களை
ஒன்றென்ன பல தசாப்தங்கள்
கடந்து சென்றாலும் எங்கள்
நெஞ்சை விட்டு அகலாது
உங்கள் நினைவுகள்
எத்தனை கனவுகள் கண்டிருப்போம்
அத்தனையும் புதைந்து போனதய்யா!
உங்கள் அழகான புன்னகை
முகத்தை தொலைத்து விட்டு
அமைதியற்று வாழ்கின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்திபெற தில்லையம்பலத்தானையும்,
திருவென்காட்டானையும் வேண்டி நிற்கின்றோம்... 

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவயோகலக்சுமி இரத்தினசபாபதி அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 18-10-2024

எம்முன்னே வாழ்ந்த தெய்வம்
மறைந்து ஆண்டு 13 ஆனதம்மா!

பொன்னும் பொருளும் கொட்டிக்
கொடுத்தாலும் பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய்மடியைத் தருமா??
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது..!

விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து உருவம்
கொடுத்த உயிரே!

இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம் துறந்து
மகிழ்ந்திருந்தாய் அம்மா…!

நீ ங்கள் இல்லாமல் அரண்மனையாய்
இருந்தாலும் அநாதையாய் தவிக்கின்றோம்…!
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos