

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசுப்பிரமணியம் கிருஷ்ணதாஸ் அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தெய்வமே எங்கள் ஆருயிர் அப்பாவே
அன்போடும் பண்போடும் அயாரமல் காத்தவரே
16 ஆண்டு ஆனதுவோ
அப்பா நீங்கள் இன்றி ஆறாத் துயரில்
நாம் அனுதினமும் தவிக்கின்றோம்.
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
அப்பா உங்கள் அன்புக்கு அது ஈடாகுமா
எல்லாம் இருந்தென்ன எம்மோடு நீயின்றி
இதயம் கனக்கிறது
எழுதிய விதி எண்ணி நேற்றுபோல்
எல்லாமே நெஞ்சுக்குள் நிக்குதய்யா
நித்தம் உனைநினைத்து சித்தமும் துடிக்குதய்யா
காலங்கள் விடைபெறலாம் ஆனாலும்
கண்முன்னே நீ வாழ்ந்த நினைவுகள்
ஒருபோதும் அகாலது
கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்
காவல் தெய்வமாய் என்றும் இருப்பதாய்
கனக்கும் எம் இதயங்கள்
உம் ஆத்ம சாந்திக்காய் வேண்டும்
ஆருயிர் மனைவி, பிள்ளைகள்,
சகோதரர்கள், சகோதரி, மைத்துனர்,
மைத்துனி, உற்றார், உறவினர், நண்பர்கள்...