15ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சிவசுப்பிரமணியம் கிருஷ்ணதாஸ்
1967 -
2009
நல்லூர், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசுப்பிரமணியம் கிருஷ்ணதாஸ் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா! ஆண்டு பதினைந்து கடக்கின்றன
உங்கள் நினைவுகள் நெருங்கியே வருக்கின்றன
உங்கள் நினைவு நாள்கள் மட்டும்
நினைவுட்டுகின்றன நீங்கள் மரித்துப்போனதை!
நாட்கள் தினம் நகர்ந்து போகும்
வீட்டில் நீங்கள் நட்ட மரம் கூட
ஒருநாள் பட்டுப்போகும்!
எங்கள் இளமையும் ஆனால்....
முதுமையாய் வளர்ந்துபோகும்...
உங்கள் நினைவுகள் மட்டும் எப்போதும்
எங்களில் இளமையாக நிலைத்திருக்கும்!
எங்களை வாளத்தெடுக்க வாழ்நாள்
எல்லாம் உங்களை உரிக்கி உழைத்த அப்பாவே!
இந்த பூவுலகையும் உங்கள் மனைவி
பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகளையும்
விட்டகன்ற நீங்கள் என்றும் எங்களுக்கும்
எல்லோருக்கும் வழங்கும் நல்லாசியுடன்
நனைந்து கொண்டிருக்கும்
தங்களின் நினைவோடு.... நாங்கள்..!
தகவல்:
குடும்பத்தினர்