Clicky

பிறப்பு 30 JUL 1937
இறப்பு 16 DEC 2020
அமரர் சிவப்பிரகாசம் செல்வநாயகி
வயது 83
அமரர் சிவப்பிரகாசம் செல்வநாயகி 1937 - 2020 வறுத்தலைவிளான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆத்மஜோதி உதயகுமாரின் தாயாருக்கு ...எமது கண்ணீர் அஞ்சலிகள் .. எனது நண்பனுக்கு நீ தாயென்றால் என்றால் எமக்கும் நீ மறுதாயல்லவா...? ஊரினைக் கூட்டி ஒப்பாரி வைத்து மனிதா...! உன் பேரினை நீக்கி பிணமென்று பேரிட்டு பனிமலர்ப் படுக்கையிட்டு...! சூறையங் காட்டிடை கொண்டு போய் தீக்கிடையிட்டு சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைவொழிப்பார்களே எப்படி அம்மா - உன் நினைவினை நாம் அழிப்போம்...? செத்தனள் என்று செப்பிட முடியா அற்புதம் உந்தன் வித்தகம் அறிந்தவர்கள் நாங்கள் உத்தமி உந்தன் பிரிவால் பெரிதும் வாடுகின்றோம் அம்மா...! இங்கு இசைக்கப்படுவது நீழ்தூக்கத்திற்கான தாலாட்டல்ல ஆழ்நெஞ்சில் ஆர்ப்பரிக்கும் உதிரத்தை உணர்த்தும் ஊனராகம்...! விழிவழி சுரந்திடும் மனவலி இன்றைய நிசப்தத்தில் வழியும் உறவுகளின் உயிர்த்துடிப்பு...! உறவுகள்,உரிமைகள் , உணர்வுகள் என - உனது சுற்றுப் பயணம் முற்றுப்பெறுகிறது இன்று உனது விழிகளில் கோபம் தெரியவில்லை...! எதுவுமற்ற வெற்றுச்சிரிப்பு ஒன்றையும் உரைக்காது உரைத்து மௌனமொழி இயம்பி மௌனிக்கின்றது...! கரைத்துச் செல்லப்பட்ட வாழ்வின் சரிதத்தில் ஓய்ந்து போவது ஓசையின்றிய உனது உயிரின் துடிப்பு மட்டுமே...! இறப்பினைக் கடந்து நிற்கும் காலங்கொள்ளா அறப்பொருளே ஓய்ந்ததிவள் உயிரென்றும் தேய்ந்தவுயிர் இது வென்றும் சொல்லமனம் ஒப்பலையே...! மறக்கவில்லையம்மா உன்னை இமைக்குள் மூடி வைத்துள்ளோம் உயிர் நிறைந்த உடலில்லை ஆயினும் உளம் நிறைந்த நினைவுகளுடன் வாழுகின்றோம் அம்மா...! பேணிவரும் உனதுருவை தினம் மனதால் உணர்கின்றோம் பின் இறந்தாய் என்று எப்படி எம்மால் உன்னை மறக்கமுடியும்...? உருவம் என்று இன்றில்லை ஆனாலும் உறுதிமிக்க எமது உள்ளத்திலே வாழுகின்றாய் பெற்றாரும் உற்றாரும் போற்றும் நிறைவுளமே...! என்னாளும் எம்மோடு வாழும் தெய்வமாய் உன்னை வணங்குகிறோம் உன் நினைவோடு உறவாடுகிறோம் உன் ஆத்மாசாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம்...! கண்ணீருடன் இராகவனும் மகாஜனா 82 அணியினரும்
Write Tribute