யாழ். வறுத்தலைவிளான் தேங்கிரானைப் பிறப்பிடமாகவும், வருத்தலைவிளான், கனடா Scarborough, Brampton, Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவப்பிரகாசம் செல்வநாயகி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
தன்னையே உருக்கி பிள்ளைகள் நலனுக்காய்
பெருந்துயர் தாங்கியே வாழ்ந்த
- அன்னையே
செல்வ நாயகி என்றோர் பிறப்பெடுத்து
தொல்லைகள் விட்டோழிந்து போனீரோ!
அன்புடனும் பாசத்துடனும்
எங்களை
பாதுகாத்த தெய்வமே
எங்கள்
அனைவரையும் விட்டு பிரிந்தது ஏனோ?
துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள்
ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய் - அம்மா
எம்மை எல்லாம் ஆழாத்துயரில்
ஆழ்த்தி
விட்டு சென்றது ஏனோ?
ஆண்டுகள் நான்கு ஆனதம்மா
உங்கள் நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு எம்மை
வந்து துடிதுடிக்க வைக்குதம்மா!
ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட
இருந்தாலும்
அன்னையே உன்னைப்போல்
அன்பு கொள்ள யாருமில்லை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.....
Deepest Sympathies.