யாழ். வறுத்தலைவிளான் தேங்கிரானைப் பிறப்பிடமாகவும், வருத்தலைவிளான், கனடா Scarborough, Brampton, Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் செல்வநாயகி அவர்களின் நன்றி நவிலல்.
எமது தாயாரின் இழப்புச் செய்தி அறிந்ததும், முகநூல் பதிவினூடாக ஆறுதல்கூறியும் அனுதாபம் தெரிவித்த அன்பர்களுக்கும், நேரடியாக தொலைபேசி அழைப்பின் மூலம் எமக்கு அனுதாபமும் ஆறுதலும் தெரிவித்த ஆத்மஜோதி நிர்வாக சகாக்கள், ஆசிரியர்கள், மாணவன் அபிநாத் மற்றும் பகீரதன், பெற்றோர்கள், மகாஜன நண்பர்கள், நண்பர்கள், உற்றார், உறவினர்கள், அன்பர்கள் ஆகியோருக்கும், மேலும், Whatapp, Viber, Messenger, Time FM Montreal102.9 தமிழ் வானொலி, Lankasri, CTBC தமிழ் வானொலி ஆகியவற்றின் மூலம் தகவல் பரிமாறியும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், அத்துடன் இவற்றின் மூலம் இலங்கை, இந்தியா, இலண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ், டென்மார்க், கொலண்ட், அவுஸ்ரெலியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா-கனடாவிலிருந்தும் அழைத்து அனுதாபமும் ஆறுதலும் தெரிவித்தவர்களுக்கும், லங்காஸ்ரீ மூலம் அனுதாபம் தெரிவித்த உறவுகளுக்கும், மேலும், எனது தாயாரின் இறுதி மரியாதையில் கலந்து கொண்ட 190 உறவுகளுக்கும், அவர்களில் ரொரொன்ரோவிலிருந்து வந்து உரிமையோடு கலந்து கொண்ட உறவுகளுக்கும், மலர்வளையம் மூலம் மரியாதை செய்த ஆத்மஜோதி தமிழர் இணையம், மகாஜனன் 82, வருத்தலைவிளான் ஒன்றியம் உட்பட அனைத்து அன்பு உறவுகளுக்கும், முக்கியமாக இறுதிகிரியைக்கான ஏற்பாடுகளுடன் வந்த சகோதரன் சற்குணம், தம்பி உதயன் ஆகியோருக்கும், இறுதி நேரம் வரை நின்று உதவி புரிந்த தேவன் அண்ணாவிற்கும், உணவுகள் பரிமாறிய உறவுகளுக்கும், எமது தாயார் வைத்திசாலையில் இருந்த செய்தி அறிந்ததும் அழைத்து ஆறுதல் தெரிவித்த அன்புள்ளங்களுக்கும், எமது தாயாருக்கு கங்கைத் தீர்த்தம் வரவழைத்துத் தந்த சசிகிருஷ்ணா அவர்களுக்கும், அத்துடன் Time FM மற்றும் CTBCவானொலிகளின் அதிபர்களுக்கும், என்றும் மறவாத எமது குடும்பத்தின் அன்பு வணக்கத்தையும் சிரம் தாழ்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Deepest Sympathies.