யாழ். வறுத்தலைவிளான் தேங்கிரானைப் பிறப்பிடமாகவும், வருத்தலைவிளான், கனடா Scarborough, Brampton, Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவப்பிரகாசம் செல்வநாயகி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு வந்ததம்மா! நீங்கள் போனவலி மறையவில்லை
தீராத மனச்சுமைதான் தீரும்வழி தெரியவில்லை
நிலையில்லா வாழ்வுதனை நிலையான தென்றுணர்ந்து
அலைகின்ற மானுடாராய் தொலைகின்றோம் பூமியிலே
மண்ணிலோர் வழிதேடி வாழ்ந்திட்ட காலம்போய்
விண்ணிலோர் இடந்தேடி விரைந்திட்ட எம்தாயே!
புண்ணியவதி நீயம்மா! தொடர்துயர் வாழ்வதனை
தொடராமல் விடைபெற்று நிம்மதியே கொண்டீர்கள்
ஓராயிரம் உறவுகள்
எமை சூழ இப்புவிதனில் ‘அம்மா’
உனையழைக்க நீயிலையேயென
ஏங்கிடுதே இருவிழிதனில்
ஓராண்டும் உருண்டோடியதோ
என வியக்குதே இப்பொழுதினில்- அம்மா
உன்குரலோசை தினம் தினம்
கேட்குதே எம் உளம்தனில்
ஓர் கூட்டுப்பறவைகளாக
எமை சேர்ப்போம் தாய்மடிதனில்- அம்மா
உன் நினைவுகள் என்றும் மறவோம்
எம் வாழ்நாள் உள்ளவரை.....
என்றென்றும் எழிலோடு
எம் நெஞ்சிலெ நீ வாழ்வாய் !
உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Deepest Sympathies.