5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 18-10-2021
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதசுந்தரம் பூரணம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் அன்னையே…
ஆண்டு ஐந்து ஆனதோ
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து...
வருடங்கள் ஐந்து கடந்தும்
மீளவில்லை உங்கள்
நினைவில் இருந்து தாயே
மழைகூட ஒருநாளில் தேனாகலாம்,
மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா?
அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா?
அம்மா உங்கள் கடமைகளை
மிகவிரைவில்
முடித்துக்கொண்டு
எங்களிடமிருந்து
சென்றுவிட்டீர்களே!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு
அம்மாவாக வந்திடுங்கள்
காத்திருப்போம்!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்