4ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதசுந்தரம் பூரணம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நான்கு ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
உங்கள் உடல்தான் பிரிந்து சென்றது
ஆனாலும் முழு நினைவாக- உங்கள்
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா!
நேசம் என்றும் நிலைத்திருக்க
அன்பான அன்னையாய்
ஆருயிர்த் துணைவியாய்
அழகான வாழ்க்கையில்
நிலவாக வாழ்ந்தாயே
மனதோடு போராடும்
மறையாத ஞாபகங்களுடன்
மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்