அமரர் சிவகுரு சிவானந்தன்
(ஆனந்தன்)
BSc Hons. Maths- Colombo, Chartered Accountant, முன்னாள் மாணவர்- ஸ்கந்தவரோதயக் கல்லூரி , முன்னாள் ஆசிரியர்- உரும்பிராய் இந்துக்கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, Co-founder and permanent Trustee of Oriental Fine Arts Accademy of London(OFAAL)
வயது 68
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கன்னிப் பல்கலையொன்றின்...,
முதல் பிரசவத்தின்...,
பச்சைப் பட்டதாரிகளாய்,
வெளியே எட்டிப் பார்க்கையில்....,
வெத்திலைத் தட்டுடன்...,
வரவேற்க யாரும் காத்திருக்கவில்லை!
பாலைவனத் தேசமொன்றில்,
சமையல் கூடத் தெரியாத ஒருவனாய்,
உனை முதலில் சந்தித்தேன்..!
எங்கோ பார்த்த முகமென்றாய்..!
இருக்கலாம்..என்றேன்..!
அன்று முதல்..,
ஒரு அண்ணனாய்....நண்பனாய்...,
வாழ்வின் வழி காட்டியாய்..,
நினைவில் நிமிர்ந்தாய்...!
உரசல்கள்....விரிசல்கள்..!
எல்லாமே,
உனது ஒரு புன்னகையில் மறையும்..!
இதை எழுதும் போதும்..,
கண்கள் பனிக்கின்றன..!
அந்த மாயப் புன்னகை கூட.,
நினைவில் வருகின்றது..!
பிரபஞ்சத்தின் இயக்கமே,
வட்டம் தானே,நண்பா?
சென்று வா...!
மீண்டும் எங்கோ சந்திப்போம்..!
Write Tribute