யாழ். சங்கானை தேவாலய வீதியைப் பிறப்பிடமாகவும், Nigeria, Lesotho, லண்டன் Edgware ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவகுரு சிவானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே...!
காலன் அவன் பார்வையிலே
சென்றதேனோ என்னை தவிக்கவிட்டு...!
வரமென என் வாழ்வில்வந்த தவமே...!
புன்னகை தந்து எண்ணமதில்
வண்ணமாய் நிறைந்தவரே
காலமெல்லாம் மாறாத வலி
தந்துஎங்கு சென்றீரோ...?
விழியினில் வலியினை தந்து
மறைவினில் ஏக்கத்தை தந்து
எங்கே சென்றீரோ...!
எம் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உமை
கண்ணைக் காக்கும் இமை
போலஎம்மைக் காத்த எம் அப்பா!
ஈராண்டு ஓடிற்றோ?
உமை இவ்வுலகில் நாமிழந்து
வையத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும்
நீங்காமல் உம் நினைவு
எம்மோடு நிறைந்திருக்கும்
அன்பினில் எம்மை சீராட்டி
பண்பினில் நாம் சிறக்க...!
நாளும் வழிகாட்டிய எம் தந்தையே
பிரிவினில் உம் மறைவினில் - நாளும்
வாடுகின்றோம் கண்ணீரில்