Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 24 FEB 1973
மறைவு 11 JUL 2021
அமரர் சின்னையா மணிவண்ணன்
வயது 48
அமரர் சின்னையா மணிவண்ணன் 1973 - 2021 பொலிகண்டி, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:16/07/2026

 
யாழ். பொலிகண்டி கிழக்கு தம்பலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னையா மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.    

எங்கள் அன்பு சகோதரா..!
 
ஐந்தாண்டு நினைவுகளாகியும்
நீங்கள் ஆரத்தழுவிய
நெஞ்சு மனங்கள் 
தவிக்குது சகோதரா

உடன்பிறந்த உறவெனும்
 உயிரின் ஒரு பாதி நீங்கள்...

சிரிப்பில் துணையாகவும்,
சோகத்தில் தோளாகவும் இருந்த நீங்கள்...

இன்று நினைவாக மட்டும்
எங்கள் நெஞ்சில் வாழ்கிறாய்...

உன் குரல் கேட்காத வீடும்,
உன் காலடி பதியாத வாசலும்,
வெறுமையின் வலியை தினமும்
 எனக்கு உணர்த்துகின்றன...

காலம் கடந்தாலும் காயம் மறையவில்லை...
 நீங்கள் இல்லாத ஒவ்வொரு நாளும்
 ஒரு குறையாகவே இருக்கிறது..!

எங்கள் அன்பு சகோதரா,
நீங்கள் விண்ணில் நட்சத்திரமாக இருந்தாலும்,
 என் இதயத்தில் என்றும் அழியாத
 நினைவாகவே இருப்பாய்..!

"உன்னை இழந்த துயரம் மாறாது;
 உன்னை நினைக்கும் அன்பு குறையாது." 💐🕯️

நீங்களில்லா வீடு வெற்றிடமாய் - மனதிலும்
 வண்ணமில்லை வனப்பில்லை - உங்கள்
வாசமும் இல்லாமல்
வாழ்கின்றோம் நாங்கள்..!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos