2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
16
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். பொலிகண்டி கிழக்கு தம்பலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னையா மணிவண்ணன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-06-2023
நீ மண்ணுலகு விட்டு விண்ணுலகு விரைந்து
ஆண்டு ரெண்டென்ன ஆயிரமே ஆனாலும்
ஆறுமா எம்துயரம் மாறுமா எம் கவலை!
உன்னை இழந்து
ஆண்டு இரண்டு ஆனாலும்
உந்தன் அன்பு முகமும்
நேசப் புன்னகையும்
மறையவில்லை!
பூமியிலே ஒன்றாய் இருந்து
கூடி மகிழ்ந்த காலமெல்லாம்
மறைந்திடுமோ!
நீங்கள் என்னைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உன் ஆசைமுகம் என் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கிறேன்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
மணிஅண்ணா வின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போமாக.