1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 24 FEB 1973
மறைவு 11 JUL 2021
அமரர் சின்னையா மணிவண்ணன்
வயது 48
அமரர் சின்னையா மணிவண்ணன் 1973 - 2021 பொலிகண்டி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பொலிகண்டி கிழக்கு தம்பலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னையா மணிவண்ணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பிரிவுகளால் வலிகள் தந்தவனே
வசந்தத்தை தொலைத்து தூரமானாயோ
புன்னகை உன் காணாது தவிக்கின்றோம்
உன் மொழி கேளாது அழுகின்றோம்
கண்ணீருக்கு கலப்படம் தேவையென்றோ
குருதி படிந்த நினைவுகளை தந்துவிட்டாய்
 காலங்கள் தேய்ந்திடினும்
உன் நினைவுகள் அழிந்திடுமோ

நாளெல்லாம் மனைவி
சகோதரன், சகோதரிகள்
நினைந்து அழ
 மைத்துனர் நல்கி அழ

மருமக்கள், பெறாமகள் மாமா மாமா என
மண்ணில் வீழ்ந்து அழ 
மாமன்மார் உறவு நடந்ததை
நினைத்து நாடி விறைக்க

உற்றார் உருக்குலைந்து
உள்நா பற்றி பதறி அழ - எங்குற்றாய்
 மீண்டொரு கால் வாராயோ எம் உயிரே!
உங்கள் ஆத்ம சாந்திக்கு
வேண்டிப் பிரார்த்திக்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 12 Jul, 2021