சாருகா! மண்ணுலகில் எம்மைஎல்லாம் தவிக்கவிட்டு நீ விண்ணுலகிற்கு ஏன் அம்மா விரைந்து சென்றாய். பெற்றோருக்கு உன் இழப்பு பேரிடியாய் வந்ததம்மா இப்போதும் அச்செய்தி கனவாய் இருக்க வேண்டும் தாம் கண் விழிக்கும் போதினிலே தங்கள் கடைக்குட்டி கண்சிமிட்டி நிக்கவேண்டும் என்று கதறி துடிக்கின்றார். அக்காவும் சித்திகளும் உன் பிறந்தநாளில் வந்து அதிர்ச்சி அளிக்க ஆயத்தங்களை செய்கையிலே உன் பிரிவுச் செய்தி போய் பேரதிர்சி கொடுத்ததம்மா. உன் அக்காவோ தன் உயிரே போனதுபோல் நடை பிணமாய் நிற்கின்றார். உன் அண்ணா தங்கையை காலனவன் கருணையின்றி காவு கொண்டு விட்டான் என்று கதறி துடிக்கின்றான் . சாரு அம்மா மானிடர்கள் நாங்கள் இங்கு கலங்கி இருக்கையிலே நீயோ அம்பாளின் அணைப்பினிலே அமைதியாய் இருக்கின்றாய்.உன்னை மீட்டுவர எம்மிடமோ சக்தியில்லை. உன் சாந்திக்காய் தினந்தோறும் வேண்டுன்றோம் சாரு அம்மா.
Our deepest sympathies to your family