Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 02 DEC 2000
உதிர்வு 07 NOV 2021
அமரர் சாருகா சத்தியரூபன்
Waterloo பல்கலைக்கழகம் கனடா இறுதி வருட மாணவி
வயது 20
அமரர் சாருகா சத்தியரூபன் 2000 - 2021 Toronto, Canada Canada
Tribute 59 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வி சாருகா சத்தியரூபன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்பு மகளே !!!
முழுமதியைக் காணாது இருளில் மூழ்கி, ஒரு நிசப்தமும், மயானஅமைதியும்,
கும்மிருட்டுமாக இந்த பிரபஞ்சமே ஒன்றும்
செய்வதறியாமல் இருக்கும்,
அதே போல் மதி உனது மதிமுகம் காணாது நாங்கள்
அனைவருமே
என்ன செய்வது என்று தெரியாமல்
கலங்கி நிற்கிறோம் அம்மா,
கூற்றுவன் கைப்பட்ட எந்த
உயிரும் திரும்ப வாராது
எனினும், நீ திரும்ப வரமாட்டாயா
என்று வழிமேல் விழிவைத்து
ஒரு நப்பாசையில் காத்திருக்கிறோம் மகளே!!

எத்தனை வருடங்கள் ஆனாலும் உன் மதிமுகம்,
உன்புன்சிரிப்பு
உன் சிணுங்கல் பேச்சு எங்களை
விட்டு மறையாது.
மகளே, எனக்கு இன்னொரு பிறப்பிருந்தால் நீயே
மறுபடியும்
என் மகளாக பிறக்க வேண்டுகிறேன்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 10 Nov, 2021
நன்றி நவிலல் Mon, 06 Dec, 2021