Clicky

நன்றி நவிலல்
மலர்வு 02 DEC 2000
உதிர்வு 07 NOV 2021
அமரர் சாருகா சத்தியரூபன்
Waterloo பல்கலைக்கழகம் கனடா இறுதி வருட மாணவி
வயது 20
அமரர் சாருகா சத்தியரூபன் 2000 - 2021 Toronto, Canada Canada
நன்றி நவிலல்

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சாருகா சத்தியரூபன் அவர்களின் நன்றி நவிலல்.

எங்கள் அன்புச் செல்வமே சாருகா...
எங்களோடு நீண்ட நெடுநாட்கள்
வாழ்வாய் என்றும் எங்களுக்கு
ஆறுதலாய் இருப்பாய் என்றிருந்தோம்!

அத்தனையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய் செல்லமே!

கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?

நான் பார்க்கும் திசையெல்லாம்
உன் உருவே தெரிகிறது செல்லமே!!

நிஜத்திலே வந்துவிட்டால்
நிம்மதியாய் நாம் இருப்போம்
வாராது சென்றதனால் தீராது சோகமம்மா!!!

நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கிறது உன் வரவை எதிர்பார்த்து..!

செல்வி சாருகா சத்தியரூபன் அவர்களின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 59 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

Summary

Notices