3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சாருகா சத்தியரூபன்
Waterloo பல்கலைக்கழகம் கனடா இறுதி வருட மாணவி
வயது 20
Tribute
60
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வி சாருகா சத்தியரூபன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் வைத்தானோ - அந்த
இரக்கமற்ற கொடிய காலனவன்
விளையாடி ஆசை காட்டி - நீ
மறைந்து சென்ற மாயம் என்ன?
இறப்பு என்பது இயல்பானதென்பர்
இளமையில் இறப்பு இயல்பாகுமா?
உன்னழகு வதனம் காணாத
எம்மனம் நாளுமேங்கி நில விழந்த
வானமென இருண்டு கிடக்குதம்மா!
சிரித்த உன் அழகு வதனமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கிறது எங்கள் உள்ளங்களில்
அழியாத ஓவியமாக
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கின்றது
உன் வரவை எதிர் பார்த்து
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது...
மகளே என் உயிராய் உடலாய் உதிரமாய்
என்னுள்ளே நீ இருக்கும் போது பிரிவென்பதேது?
தகவல்:
குடும்பத்தினர்
Heartfelt condolences and prayers 🙏