கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வி சாருகா சத்தியரூபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் இமைக்கும் நேரத்தில்
ஓர் ஆண்டு ஓடி மறைந்து விட்டது!
உங்கள் நினைவோ ஒவ்வொரு
வினாடியும் எங்களை வாட்டுது சாருகா!
கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டேன் வாழ்வை
அன்று கடந்து விட்டாய்
என்னை விட்டு என் கனவை
உடைத்துவிட்டாய் மரணத்தால் நீ
எனைவிட்டுப்போய் ஆண்டு
ஒன்றானாலும் உம் நினைவோடு
எங்கள் நாட்கள் கரைகிறதே...
எத்தனை ஆண்டுகள்
கடந்தாலும் எமது மனம் உன்னை
தேடிக்கொண்டே இருக்கும்
நீ பாசமாய் பார்க்கும் பார்வை எங்கே?
நேசமாய் பகிர்ந்த பேச்சு எங்கே?
கண்களில் காட்டிடும் கருணை எங்கே?
மண்ணில் எமக்கிருந்த சுகம் எங்கே?
என்றெமைக் கலங்க விட்டதேனோ...!
நிறைவேறா உன் ஆசைகளோடு
விரைவாக ஏன் பிரிந்தாய்
இவ்வுலகை விட்டு....? என்
செய்வேன் எம் செல்லமே தேடுகின்றோம்
எம் பிள்ளை போன திசை
எது என்று தெரியாது....?
உன் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கின்றோம்...
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்.....!!!
Our deepest sympathies to your family