Clicky

மலர்வு 02 DEC 2000
உதிர்வு 07 NOV 2021
அமரர் சாருகா சத்தியரூபன்
Waterloo பல்கலைக்கழகம் கனடா இறுதி வருட மாணவி
வயது 20
அமரர் சாருகா சத்தியரூபன் 2000 - 2021 Toronto, Canada Canada

கண்ணீர் அஞ்சலி

Sridevy Shsanmugathasan 13 NOV 2021 Sri Lanka

பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தை சாருகாக்குட்டியே..... அத்தனை உறவுகளையும் அழ வைத்து தவிக்கவிட்டு ஊமையாய் சட்டெனவே இமைகளை மூடியதேனம்மா..... காலமெல்லாம் உம்மை எண்ணி எண்ணி கண்ணீர் சிந்த வைத்துவிட்டு கணப்பொழுதில் எங்கு சென்றீரோ..... இடிவிழுந்த செய்தியை துடிதுடிக்க கேட்டு நித்தமும் நினைவிழந்து செயலிழந்து நிற்கதியாய் நிற்கிறோமே.... அம்மா, அப்பா, அக்கா, அண்ணாவுக்கு ஆறுதல் சொல்ல எத்தனை பேர் இருந்தாலும் உங்களைப் போல் வருமா.... பாசமாய் வளர்ந்த உங்களுக்கு மாயமாய் வந்த வருத்தம் தான் என்னம்மா? பல்கலைக்கழகம் சென்று பல கலையும் கற்றது பரமனிடம் செல்லவா சாருக்குட்டியே..... பூவாக மணம் வீசி புதுமைகள் படைப்பீர் என்று ஒவ்வொரு நொடியும் ஏங்கித் தவித்த அம்மாவின் கனவு இன்று கனவாகி விட்டதே..... எங்கு தான் சென்றீரோ..... உங்கள் அழகிய முகமும் எடுப்பான தோற்றமும் பார்க்கும் இடம் எல்லாம் பரந்து கிடக்கிறதே..... சாந்த முக அழகும் காந்தம் கவர் கனிமொழியும் இனி எப்போ கேட்போமோ.... ஓடோடி வந்திடுவீர்..... ஆறுதல் தந்திடுவீர்..... ஒரு முறை தானும் ஓடி வாருமம்மா..... நீங்களில்லா வீடு நிம்மதியின்றி கிடக்குதம்மா..... கண் திறந்து பாருமம்மா..... கடைசி நேரம் என்ன தான் சொல்ல நினைத்தீரோ..... நாமறியோமேயம்மா.... இனிய பிறந்தநாளில் உம்மை அழகு பார்த்து மகிழ்விக்க காத்திருந்த வேளையிலே காலன் கவர்ந்தானே? ஆசையாய் காத்திருந்த அனைவருமே கதிகலங்கி நிற்பதை பாரம்மா..... சாருகாவே உமது அழகை எங்கே காண்போமோ..... ஆற்றொணாத் துயரிலே துடித்திடும் பெரியப்பா, பெரியம்மா, மைத்துனர், அக்கா சண்முகதாசன், ஸ்ரீதேவி, ஆதித்தியன், சாளினி

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 10 Nov, 2021
நன்றி நவிலல் Mon, 06 Dec, 2021