யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வகாந்தன் இராசையா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒரு தாயின் வயிற்றில் நாம் ஒன்றாய்ப் பிறந்தோம்
இன்று எம்மை தவிக்கவிட்டு எங்கே நீங்கள் போனீர்கள்?
உடன் பிறப்பே உன் உறவே உயர்ந்தென்று இருந்தோம்.
எம் உயிரிலும் உதிரத்திலும் ஒன்றாய் கலந்திருந்தோம்
பாதியிலே நீங்கள் எமைவிட்டுப்பிரிய நாம் துவண்டு விட்டோம்
புன்னகையோடு காணாமல் போனவரே
கண்ணீரோடு எம்மை தவிக்கவிட்டுச்சென்றீர்களே
வையகத்தில் நீங்கள் வளமோடு வாழ்வீர்கள்
என வாஞ்சையுடன் நாங்கள் கண்ட கனா ஏராளம்
அத்தனையும் நீங்கள் கனவாக்கி எங்கு போனீர்கள்!
காலங்கள் தேய்திடுனும் உங்கள் நினைவுகள் தேய்ந்திடுமோ?
உறவுகள் புலம்புகின்றன ஊரே உங்களை நினைத்து உருகுகின்றது
மீண்டும் வாராயோ உங்கள் பிரிவால்
துவண்டு கிடக்கும் உள்ளங்களுக்கு ஆறுதல் தாராயோ?
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!