1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
25
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வகாந்தன் இராசையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு
எங்களைப் பாதுகாப்பாகப் பார்த்து
நல்லவற்றைக் கற்றுத் தந்து
நாமிங்கு நலமாய் வாழ்வதைப் பார்த்திட
நீங்கள் இல்லையே அப்பா
என்று உம்மை இனிக் காண்போமோ அப்பா
ஆண்டு ஒன்று மறைந்தாலும்
மனம் ஆறுதல் அடைய மறுக்கின்றது
எங்கள் சிரிப்பைத் தொலைத்து
ஆண்டு ஒன்று ஆனதிப்போ..
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் அன்புச் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் குடும்பத்தினர்!!
தகவல்:
குடும்பத்தினர்