யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை கணபதிப்பிள்ளை அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலவிளக்காய்
உள்ளத்தால் உயர்ந்தவராய்
அன்புக்கு இலக்கனமாய் - நல்
வழி காட்டியை இருந்த
எம் இனிய தந்தையே - எம்
கண்ணில் அழுகை ஓயவில்லை
நெஞ்சம் உங்களை மறக்கவில்லை
நேசம் என்றும் நிலைத்திருக்க
பாசத்தை தந்து சென்ற தந்தையே
ஆண்டுகள் ஆறு ஆனதப்பா
ஆனாலும் ஆறவில்லை நம் துயரம்
மறைந்துவிட்ட உங்கள் உருவின்
நீங்காத நினைவுகள்
உதிர்ந்துவிட்ட உங்கள் நினைவின்
உலராத வாசனை
இதயம் துடிக்கும் வரை
மாறாத நினைவு
எண்ணங்களும் செயல்களும்
நீங்களாக
கண்களை மூடி
காட்சிப்படுத்தி
கனவுகளில் காண்கின்றோம்
கணப்பொழுதும்
கண்முன் உங்கள்
விம்பம்
காலத்தை கடந்தும் கலையவில்லை
வற்றாத உங்கள் நினைவுடன்
மனம் உருகி கலங்கி நிற்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்
என்றும் உங்கள் பிரிவால் துயருற்று வாடும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.